Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

கர்னாடக இசையின் கதை
-5 %
இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள், எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவை முதல்முறையாக இந்த நூலில்தான் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இசையுலகினுள் நிலவும் சாதி, பாலினம், மொழி, மதம் சார்ந்த பாகுபாடுகளைப் பிரச்சனைப்படுத்தி விவாதிக்கிறார் கிருஷ்ணா. வாய்ப்பாட்டுக் கலைஞர்..
₹185 ₹195
கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்: சாதியினாற் சுட்ட வடு
-5 %
நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு என்பவை குறித்த பார்வையையும் அவை விஸ்தரித்திருக்கின்றன. நீண்டகாலம் கழித்துத் தமிழ் தலித் தன்வரலாற்று வரிசையில் கச்சிதமான வருகையாக திருக்கு..
₹166 ₹175
கறுப்பு வெள்ளை கடவுள்
-5 %
கடந்த சில ஆண்டுகளில் தேவிபாரதி எழுதிய நான்கு கதைகளைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு. தொகுப்பின் கதைகள் வெவ்வேறு களங்களையும் வேறு வேறு மாந்தர்களையும் கொண்டிருக்கின்றன. இக்கதைகளை வாசிக்கும்போது புதியதொரு உலகத்தின் தரிசனம் கிட்டும். சுயம்புவாக முகிழ்த்த தேவிபாரதியின் பொருள்பொருதிந்த எழுத்து நடை அந்த ..
₹228 ₹240
கற்றதால்
-5 %
தமிழ்நாட்டு உயர்கல்விச் சூழலைக் களமாகக் கொண்ட நாவல். வளாக நாவல் (Campus Novel) என்ற இலக்கிய வகைமையின் புதிய வடிவத்தில் முன்னோடிப் படைப்பு என்று கருதத்தக்கது. புனைவு, அல்புனைவு, அனுபவப் புனைவு, அரசியல், வரலாறு, இலக்கிய ஆளுமைகள், பிரதிகள் தொடர்பான குறிப்புகள் போன்ற கதையாடல் இழைகள் பலவும் ஊடாடும் பிரதி..
₹247 ₹260
கற்றாழை கற்றாழை
-5 %
பெண்ணுலகம் எதனையெல்லாம் கொண்டு துயருறுகிறது? அவர்களுக்குத் தங்களின் மனங்கள்போலவே உடல்களும் சுமையாக மாறுகின்றன. தன்னிலையைச் சமூக நிலையோடு பொருத்த வேண்டிய அவசியத்துக்குள்ளும் திணிக்கப்படுகிறார்கள். அந்தப் போராட்டங்களின் அவசங்களையும் மன எழுச்சியையும் இயல்பான சொற்களுக்குள் வடித்தெழுதுகிறார் கிருத்திகா. ..
₹133 ₹140
கலங்கிய நதி
-5 %
ஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிர வாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினீயர் ஒருவரை மீட்கும் பணியில் முனைந்து ஈடுபடும்போது சந்திக்கும் பலவிதமான மனிதர்கள் தமிழ்ப் புதின உலகுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார்கள். கடத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை..
₹399 ₹420
கலாச்சாரக் கவனிப்புகள்
-5 %
யாழ்ப்பாணக் கச்சேரியடியில் ‘இவ்விடத்தில் துப்பாதீர்கள்’ என்று அறிவிப்பு எழுதிவைத்தால் ‘எந்த மானமுள்ள யாழ்ப்பாணத்தானும் துப்பத்தான் செய்வான்’ என்று எழுதும் எள்ளலும் தள்ளலும் கொண்ட இவருடைய தமிழ் எழுத்துக்காகவே கலைத்துப் பிடித்து நட்பானேன். ஆழமும் விரிவும் மாத்திரமல்ல புன்னகையுடனும் படிக்கக்கூடிய எழுத்..
₹285 ₹300
கலாபன் கதை
-5 %
கலாபன் எனும் மனிதனின் பதினோராண்டுக் கால வாழ்வு இந்நாவல். குடும்பச் சூழலோடு தொடங்கி கரையில் கடலின் ஏக்கத்திலும் கடலில் கரையின் ஏக்கத்திலும் தொடரும் பயணம், கடலோடிகளுக்கு வரம் அருளும் முகவர்கள், கொண்டாட்டமும் ஏக்கமும் நிறை கடல் வாழ்வு, மரணபயத்தை உண்டாக்கும் கடல் நோய்மைகள், தீராததும் கட்டறுந்ததுமான காமம..
₹228 ₹240
கலி புராணம்
-5 %
‘கலி புராணம்’ உண்மையாகவே நடந்த நிகழ்ச்சியால் தூண்டப்பட்டதாகும். ஒரு வெள்ளாள குலத்துப் பெண்ணோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் கனகாலமாக களவாக உறவு வைத்திருந்து பின்னர் அவளைக் கொலை செய்த நிகழ்ச்சிதான் இதன் பின்னணி. ஆனால் கதை வழமையான சாதிப் போராட்டக் கதையாக, தாழ்த்தப்பட்ட மக்களை ஊரைவிட்டுத்..
₹76 ₹80
கலை காணும் வழிகள் | WAYS OF SEEING
-5 %
கலையுலகில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்திய நூல் ஜான் பெர்ஜரின் 'கலை காணும் வழிகள்'. பிபிசி தொலைக்காட்சித் தொடரொன்றை அடியொற்றி எழுதப்பட்ட இந்த நூல் 1972இல் வெளியானது. ஜான் பெர்ஜர் பண்டைய ஓவியங்களின் மீதிருக்கும் மாயப்போர்வையை விலக்கி அவற்றைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறார். படைப்புக..
₹304 ₹320
கலைஞர் எனும் கருணாநிதி
-5 %
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை. பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கழகத்திலும் மாநில, தேசிய அரசியலிலும் உரிய இடத்தைப் பெற அயராது உழைத்த அவருடைய ஈடுபாட்டுணர்வு இணையற்றது. தீவிரமான சவால்களையும் வ..
₹266 ₹280
Showing 409 to 420 of 1300 (109 Pages)